எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
நாகர்கோவில்:
நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர். நினைவு நாள்
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதே போல் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன், பொருளாளர் திலக், தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், நகர முன்னாள் செயலாளர்கள் சந்துரு, சந்திரன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத், 26-வது வட்ட செயலாளர் ஸ்ரீமணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மருங்கூர்
மருங்கூரில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மருங்கூர் பேரூர் செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வைரம் பிள்ளை, சத்தியமூர்த்தி, புஷ்பராஜ், ராமச்சந்திரன், மீனா, சேவியர் ராஜா, ராஜபால், நல்லபெருமாள், கலா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி பேரூர் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மகராஜ பிள்ளை, பேரூர் அவைத்தலைவர் முத்துசுவாமி, பேரூராட்சி துணை தலைவர் சுதா பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆரல்வாய்மொழி சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட இணை செயலாளரும், யூனியன் தலைவருமான சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், யூனியன் துணைத் தலைவர் லாயம் ஷேக், பேரூர் இணைச்செயலாளர் பேச்சியம்மாள், பொருளாளர் சுயம்புலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் கண்ணாடி பாலகிருஷ்ணன், ஆரல் பி.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் இசக்கிமுத்து, பக்கீர் முகமது, சண்முகநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தோவாளை
தோவாளையில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் மாவட்ட இணை செயலாளரும், யூனியன் தலைவருமான சாந்தினி பகவதியப்பன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய பாசறை இணை செயலாளர் பகவதியப்பன் முன்னிலை வகித்தார். இதையொட்டி பஸ் நிறுத்தம் அருகே பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம். ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாவட்ட பேரவை செயலாளர் ராஜாராம், ஒன்றிய அவைத்தலைவர்கள் ஐயப்பன், வெங்கடேஷ், ஒன்றிய இணை செயலாளர் ரோகிணி ஐயப்பன், ஓன்றிய இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், இளைஞரணி துணைச் செயலாளர் சிவராமன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் சபரிகிரிசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
லீபுரம் ஊராட்சி
லீபுரம் ஊராட்சியில் ஆரோக்கியபுரம், வட்டக்கோட்டை ஆகிய பகுதிகளில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு லீபுரம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் லீன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆரோக்கியபுரம் தங்கராஜ், சூசை அந்தோணி, மிக்கேல் ராஜ், பிச்சை நாடார், முத்துலிங்கம், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.