எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த அ.தி.மு.க. வேறு; தற்போதைய அ.தி.மு.க. வேறு
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த அ.தி.மு.க. வேறு; தற்போதைய அ.தி.மு.க. வேறு என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
மன்னர் நூற்றாண்டு விழாவில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுக்குழு நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் அதிகாலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதித்துறையை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. பொதுக்குழுவில் பாதுகாப்பு வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் போலீசுக்கு மனு அளித்த பின்னர் தான் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அளிக்கப்பட வில்லை என்றால் அதையும் ஒரு குற்றமாக அவர்கள் கூறுவார்கள். அவர்கள் பாதுகாப்பு கேட்டதின் பேரில் மட்டுமே போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த போது உள்ள அ.தி.மு.க. வேறு தற்போது உள்ள அ.தி.மு.க. வேறு. இதற்கும், அதற்கும் சம்பந்தமே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.