எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x

விருதுநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது. இதில் சிவகாசியில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி

விருதுநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது. இதில் சிவகாசியில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள்

அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் காளிமுத்துநகர், மேலரதவீதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ரமணா, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக் களுக்கு அன்னதானம் மற்றும் கேசரி வழங்கப்பட்டது.

சிவகாசி மாநகர கிழக்கு, மேற்கு பகுதிகள் சார்பில் வேலாயுதம் ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுமக்களுக்கு அன்னதானம், கேசரி ஆகியவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், பகுதி கழக செயலாளர்கள் சாம், கருப்பசாமிபாண்டி யன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். பிறந்தநாளை யொட்டி சிவகாசி மாநகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தனர்.

விருதுநகர்

விருதுநகரில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமையிலும், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் கலாநிதி முன்னிலையிலும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் முகமது நைனார். ஒன்றிய செயலாளர்கள் கே.கே.கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் சரவணகுமார் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் தலைமையில் நகர செயலாளர் ராஜ்குமார், மாவட்ட நிர்வாகிகள் மூக்கையா, ஜெயக்கொடி மற்றும் அணியினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.ம.மு.க. சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் சந்தோஷ் தலைமையில் அ.ம.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.சி. மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story