திருப்புவனம் அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த போர் வீரரின் நடுகல் சிலை கண்டெடுப்பு


திருப்புவனம் அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த போர் வீரரின் நடுகல் சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே தூதை கிராமத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை

திருப்புவனம் அருகே தூதை கிராமத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.திருப்புவனம் அருகே தூதை கிராமத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

நடுகல் சிலை

திருப்புவனம் தாலுகா தூதை கிராமத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துடன் கூடிய நடுகல் சிலை ஒன்று இருந்தது.இது குறித்து மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வரலாற்று ஆர்வலர் மதுரை அருண்சந்திரன் கொடுத்த தகவலின் பேரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் சாந்தலிங்கம், மூத்த கல்வெட்டு அறிஞர் ராசகோபால் மற்றும் ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துபாண்டி ஆகியோர் இந்த சிற்பத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த சிற்பம் கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த போர்வீரரின் நடுகல் சிலை என்று தெரிந்தது.

முற்றிலும் சிதைந்த எழுத்துக்கள்

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:-

இந்த சிற்பத்தின் உயரம் 3 அடியும் அகலம் 1¾ அடியில் செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் ஒருவன் சண்டைக்கு தயார் நிலையில் நின்றவாறு தனது இடது கையில் வில்லுடனும், வலக்கையில் அம்பை பிடித்தவாறும் இடுப்பில் கச்சை கட்டி அதில் மதுக்குடவை ஒன்று இருப்பது போன்று இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற பகுதியில் மூன்று புறங்களிலும் தமிழ் வட்டெழுத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளன. அதில் கீழ் பகுதியில் உள்ள எழுத்து முற்றிலும் சிதைத்து உள்ளது. இடப்புறத்தில் உள்ள சில எழுத்துக்களும் சிதைந்து விட்டது. அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு சண்டையில் இவ்வீரன் எதிரி படையுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று இறந்துள்ளான். அதை நினைவு கூறும் விதமாக இவ்வூர் மக்களாலோ அல்லது இவ்வீரனின் உறவினர்களாலோ நடுகல் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த நடுகல்லில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாண்டியர் கால கொற்றவை சிற்பம் ஒன்றும் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story