பால்குட ஊர்வலம்

இளையான்குடி அருகே வீரன் திடல் கிராமத்தில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
சிவகங்கை
இளையான்குடி
இளையான்குடி அருகே வீரன் திடல் கிராமத்தில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. கல்லணி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஆண்கள், பெண்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து வீரன்திடல் கிராமத்தில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவிைல வந்தடைந்தனர். பின்னர் பாண்டி முனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. இவ்விழாவில் வீரன்திடல், கல்லணி, உதயனூர் கிராம மக்கள் மற்றும் கோவிலை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story






