கருப்பனூர் ஊராட்சியில் 35 பேருக்கு கறவை மாடுகள்


கருப்பனூர் ஊராட்சியில் 35 பேருக்கு கறவை மாடுகள்
x

கருப்பனூர் ஊராட்சியில் 35 பேருக்கு கறவை மாடுகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.

திருப்பத்தூர்

கருப்பனூர் ஊராட்சியில் 35 பேருக்கு ரூ.39 லட்சத்தில் கறவை மாடுகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.

திருப்பத்தூர் ஒன்றியம் கருப்பனூர் ஊராட்சியில் ரூ.19 லட்சத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் ஊராட்சி ஒன்றிய பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சி.என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் க.தேவராஜ், ஏ.நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும் குத்துவிளக்கு ஏற்றினர்.

பின்னர் கருப்பனூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாட்கோ மற்றும் யூனியன் வங்கி மூலம் ரூ.39 லட்சம் மதிப்பில் 35 நபர்களுக்கு கறவை மாடுகளையும் வேளாண்மை துறை சார்பில் 300 பேருக்கு தென்னங்கன்றுகளையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம், வேளாண்மை உதவி இயக்குனர் ஏ.ராகினி, மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார் திருப்பதி, ராஜா கவுண்டர், உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story