நல்லமுத்துமாரியம்மன் கோவில் பால்குட விழா


நல்லமுத்துமாரியம்மன் கோவில் பால்குட விழா
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் நல்லமுத்துமாரியம்மன் கோவில் பால்குட விழா நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் நல்லமுத்துமாரியம்மன் கோவில் பால்குட விழா நடைபெற்றது.

பால்குட விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செஞ்சை நாச்சுழியேந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி பால்குட விழா கடந்த 16-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று வந்தது. மேலும் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள கீழ ஊருணி பிள்ளையார்கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி, கரகம் எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முளைப்பாரி

பால்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. இதையடுத்து கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் மாலையில் கரகம், மது மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story