ரெத்தினகிரீசுவரர் கோவில் மலை உச்சியில் இருந்து பால் வடிந்தது?


ரெத்தினகிரீசுவரர் கோவில் மலை உச்சியில் இருந்து பால் வடிந்தது?
x

ரெத்தினகிரீசுவரர் கோவில் மலை உச்சியில் இருந்து பால் வடிந்தது? இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

கரூர்

குளித்தலையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அய்யர்மலை உள்ளது. இங்கு திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற மிகவும் பிரசித்தி பெற்ற ரெத்தனகிரீசுவரர் கோவில் உள்ளது. 4 கிலோ மீட்டர் சுற்றளவும், ஆயிரத்து 178 அடி உயரம் கொண்ட இந்த மலைக்கோவில் உச்சிக்கு செல்ல 1,017 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையில் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலின் வடபுறம் மலை உச்சிக்கு சற்று அருகாமையில் உள்ள மலைமுகட்டில் இருந்து பல வழிகளில் நேற்று பால் வடிந்துள்ளது. மலை உச்சியில் இருந்து மலையின் அடிப்பகுதிக்கு சற்று மேல்பகுதி வரை பால் மாலைவரை வழிந்தோடி வந்துள்ளது. இதை அப்பகுதியாகச் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மலை உச்சியில் இருந்து வழிந்தோடி வந்தது சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலாக இருக்கலாம் என்று ஒரு சிலர் தெரிவித்தனர்.

பால் வழிந்தோடி வந்த மலை முகட்டிற்கும் மலை உச்சியில் சாமி வீற்றி உள்ள இடத்திற்கும் தொடர்பு இல்லை என்று சிலர் கூறினர். ஆனால் இந்த மலையில் இருந்து வழிந்து ஓடியது பால் போன்ற திரவமே என்று பொதுமக்கள் கூறினர். உண்மையில் மலை உச்சியில் இருந்து பால் வடிந்ததா? அல்லது தேங்கிய மழைநீருடன் ஏதேனும் வெண்மையான பொருள் கலந்து வெள்ளை நிறத்தில் வழிந்து ஓடியதா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story