பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டும், மிகவும் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் கிராம கூட்டுறவு பால் சங்க பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், 50 சதவீத மானியத்தில் கால்நடை தீவணம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

இதில் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் சிவனேசன், பொருளாளர் செய்யத் உள்பட பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story