மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் நலசங்கம் நடத்திய பால் நிறுத்த போராட்டம் வாபஸ்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் பால் நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மதுரை,
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். முன்னதாக பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் பொது மேலாளர் சாந்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி இன்று பால் நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்களின் இந்த பால் நிறுத்த போராட்டத்தால் மதுரை ஆவினுக்கு வரக்கூடிய பால் வரத்து குறைந்தது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஆவின் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் பால் நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து இன்று மாலை முதல் வழக்கம்போல் பால் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பால் விலை உயர்வு அறிவிப்பு விரைவில் வரவில்லை என்றால் வரும் 17-ந்தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.