திம்பம் மலைப்பாதையில் கார் மீது மினி லாரி கவிழ்ந்து விபத்து


திம்பம் மலைப்பாதையில் கார் மீது மினி லாரி கவிழ்ந்து விபத்து
x

திம்பம் மலைப்பாதையில் கார் மீது மினி லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு

தாளவாடி

திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதையில் வளைவில் திரும்பும்போது வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து ஈரோட்டுக்கு பாக்குமட்டை பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது. அந்த மினி லாரி திம்பம் மலைப்பாதை 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அப்போது மைசூருவில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த கார் மீது மினி லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் கார், மினி லாரி சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story