மினி டிரான்ஸ்பார்மர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்
மினி டிரான்ஸ்பார்மர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் அதிகாரி ஒருவர் கூறினார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி செல்வ சுந்தர விநாயகர் நகரில் குறைந்த மின்னழுத்த குறைபாடுகளை போக்கும் வகையில் மினி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 6 மாதங்களாகியும் இந்த டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே இந்த டிரான்ஸ்பார்மரை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது தற்போது எந்த குறைபாடும் இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அந்த டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story