புதுச்சத்திரம் அருகே கார் மீது மினி லாரி மோதி விபத்து - 7 பேர் காயம்


புதுச்சத்திரம் அருகே கார் மீது மினி லாரி மோதி விபத்து - 7 பேர் காயம்
x

புதுச்சத்திரம் அருகே கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 7 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

நாமக்கல்


சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுச்சத்திரம் அருகே உள்ள ரெட்டிப்புதூர் பகுதியில் சென்றபோது, முன்னால் இரும்பு லோடு ஏற்றிச் சென்ற மினி லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அதில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் ஏறியதோடு, எதிர்திசை சாலையில் ஓடியது. பின்னர் சேலம் நோக்கி சென்ற கார் மீது மோதி நின்றது.

இதில் காரில் பயணம் செய்த 6 பேர் மற்றும் மினி லாரி டிரைவர் என மொத்தம் 7 பேர் காயம் அடைந்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்திற்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story