திருப்பூர்: ஆமினி வேன்-அரசு பஸ் நேருக்குநேர் மோதி விபத்து - ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி


திருப்பூர்: ஆமினி வேன்-அரசு பஸ் நேருக்குநேர் மோதி விபத்து - ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
x

திருப்பூரில் ஆமினி வேன்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் யோகேஸ்வரன்(26). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணம் செய்ய ஒரு பெண்ணை பார்த்து குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

திருமண பேச்சுவார்த்தை குறித்து கலந்து ஆலோசிக்க வெள்ளகோவிலில் உள்ள அத்தை வீட்டிற்கு யோகேஸ்வரன் தனது உறவினர்கள் 6 பேருடன் ஆம்னி வேனில் இன்று காலை சென்றுள்ளார். ஆம்னி வேனில் தாய் மாமன் மருதாச்சலம்(65), யோகேஸ்வரனுடைய தாய் தேவி, அத்தை பிரமிளா(45) உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

இவர்கள் வெள்ளகோவில் வந்து திருமணம் குறித்து கலந்து பேசிவிட்டு மீண்டும் திருப்பூருக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். ஆம்னி வேனை யோகேஸ்வரன் ஓட்டிவந்துள்ளார். இவர்கள் கரூர்-கோவை மெயின் ரோட்டில் ஓலப்பாளையம் அருகே செல்லும் போது எதிரே வந்த அரசு பஸ்சும் ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பிரமிளா, யோகேஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காயம் அடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்கா தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தேவி உயிரிழந்த நிலையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story