அடிப்படை வசதி குறித்து அமைச்சர் ஆய்வு

தாராபுரம்:
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி முகமதிய நகரில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெரு விளக்கு, சாக்கடை வசதி, சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொது மக்கள் கவுண்டச்சி புதூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் கயல்விழி கூறும்போது " முகமதியர் நகரில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் ஏற்கனவே நான்கு தெரு விளக்குகளை ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைத்துக் கொடுக்கப்பட்டது மேலும் சாலை வசதி, சாக்கடை வசதி மேலும் தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே செல்வராஜ், நகர செயலாளர் கே.எஸ் தனசேகர், 9-வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியம் ஊராட்சி செயலர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.