பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை, வரும் ஜூன் மாதம் நடக்கும் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை, வரும் ஜூன் மாதம் நடக்கும் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
x

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை, வரும் ஜூன் மாதம் நடக்கும் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை, வரும் ஜூன் மாதம் நடக்கும் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி,

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தாண்டு 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்தோம். கடந்த கல்வியாண்டில் அவ்வாறு தேர்வு எழுத முன் வராத 52 ஆயிரம் மாணவர்களை கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுத வைத்துள்ளோம்.

அதேபோல் தற்போது பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை வரும் ஜூன் மாத இறுதியில் நடத்தப்படவுள்ள உடனடி தேர்வினை எழுத வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கல்வியில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்த வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் 10 வகுப்பு படித்துவந்த மாணவர்கள் அனைவருக்கும் முழு தேர்ச்சி வழங்கப்பட்டது. மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக வந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்செல்லும் வரை, அந்த மாணவரின் பெயரை வருகை பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தியிருந்தது.

அந்தவகையில், இந்தாண்டு பொது தேர்வு எழுத முன் வராத பல மாணவர்கள், தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முன் வருவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story