அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை தொடங்கி வைக்கிறார்


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை தொடங்கி வைக்கிறார்
x

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலான பிரச்சார வாகன சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை துவக்கி வைத்து, பாட புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்க இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலான பிரச்சார வாகன சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்க உள்ளார். முதலாம் வகுப்பு உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வெளியான நிலையில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Next Story