பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு


பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
x

பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நேற்றுமுன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது

சென்னை தாம்பரம் மாநகராட்சி பல்லாவரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை நிலையில் இன்று காலை பள்ளிக்கு திடீரென ஆய்வுக்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து மாணவ மாணவிகளுக்கு விலைஇல்லா நோட்டு புத்தகங்களை வழங்கினார் பின்னர் பள்ளி முழுவதும் ஆய்வு செய்தார் பள்ளியில் குடிநீர் வசதி உள்ளதா கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா பள்ளி கட்டிடங்கள் நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தார் பள்ளிக்கு தேவையான மேஜை நாற்காலிகள் வழங்கவும் நடவடிக்கை எடுத்தார் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வின் போது உடன் இருந்தனர்

1 More update

Next Story