ஆசிரியைகள், மாணவிகளிடம் குறை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி


ஆசிரியைகள், மாணவிகளிடம் குறை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி
x

சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியைகள், மாணவிகளிடம் அவர் குறைகளை கேட்டார்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியைகள், மாணவிகளிடம் அவர் குறைகளை கேட்டார்.

அமைச்சர் ஆய்வு

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,600-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிட்டார். அப்போது ஒரு அரங்கத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் தற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டதை அங்குள்ள ஆசிரியரிடம் கேட்டறிந்தார். இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் விளையாட்டு மைதானம், கூடுதலாக கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளிடம், மாணவிகளின் தேர்ச்சி விவரத்தை கேட்டறிந்தார்.

மாலை நேர வகுப்பு நடத்த அறிவுறுத்தல்

மாணவிகளுக்கு மாலைநேர வகுப்புகள் நடத்தி பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த திடீர் ஆய்வில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் சகாயஅந்தோணியூசின், நகரச் செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ், அவைத்தலைவர் ராமன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, திருவேடகம் ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலாசரவணன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆய்வின் போது உதவி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியைகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story