செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு...!
வேகமாக நிரம்பி வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னை,
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் தற்போது வினாடிக்கு 3,675 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் 60 பில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. ஏரி வேகமாக நிரம்பி வருவதால் கூடுதல் உபரி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ,பொதுப்பணி துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்து, நீர் வெளியேற்றப்படும் அளவு, ஏரியின் நிலைப்பு தன்மை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கணக்கீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.