கோத்தகிரியில் ரூ.2¾ கோடி வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் ஆய்வு
கோத்தகிரியில் ரூ.2¾ கோடி வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் ஆய்வு
கோத்தகிரி
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நெடுகுளா ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சன் சைன் நகரில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிடப்பணி, லில்லி ஹட்டியில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை, தோட்டக்கலைத்துறை மூலம் கப்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் காய்கறிகள் பாதுகாப்பு அறை, கேர்கம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டும் பணி, காவிலோரை கிராமத்தில் பல்நோக்கு கட்டிடப் பணி, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் கொணவக்கரை கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட 2 கழிவு நீர் கால்வாய் பணிகள், குஞ்சப்பனை ஊராட்சியில் சக்தி நகர் பல்நோக்கு கட்டிடம், ரூ.1.56 கோடி மதிப்பில் முள்ளூரில் இருந்து அறையூர் மட்டம் செல்ல அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலை, முள்ளூரில் கட்டி முடிக்கும் நிலையில் உள்ள பயணியர் நிழற்குடை என மொத்தம் 2 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் நிறைவு பெற்ற வளர்ச்சி பணிகளை அமைச்சர் ராமசந்திரன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷன குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், கோத்தகிரி தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.