உயர்கல்விக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்


உயர்கல்விக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2023 12:45 AM IST (Updated: 12 Aug 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

உயர்கல்விக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை


உயர்கல்விக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

பவள விழா

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழா மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் பிஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மண்டல இணை இயக்குனர் (கல்லூரி கல்வி) பொன்முத்துராமலிங்கம் வரவேற்று பேசினார்.

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பவள விழா மலரை வெளியிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.:-

புதுமைப்பெண் திட்டம்

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியானது, இந்தியா சுதந்திரம் பெற்றபோது அதே ஆண்டில் அழியா செல்வமான கல்வியை எதிர்கால சந்ததியினர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையிலும் மன்னர் சண்முகராஜாவால் தொடங்கபட்ட கல்லூரியாகும். இந்த கல்லுாரியில் படித்த பலர் இன்று பல்வேறு பெரும் பதவிகளில் உள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் கல்வி வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் வழங்கி வருகிறார்.. மேலும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருந்திடும் வகையில், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறார்.

உயர்கல்விக்கு ரூ.7 ஆயிரம் கோடி

நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்விக்கென ரூ.40 ஆயிரம் கோடியும், உயர்கல்விக்கென ரூ.7 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ.47 ஆயிரம் கோடி நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சிவகங்கை இளைய மன்னர் மகேஷ்துரை, சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரைஆனந்த், சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மற்றும் துறைத்தலைவர்கள், மாணவ, மாணவியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் துரைஅரசன் நன்றி கூறினார்.


Next Story