வேலூரில் புதிய பேருந்து நிலையத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


வேலூரில் புதிய பேருந்து நிலையத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 29 Jun 2022 2:31 PM IST (Updated: 29 Jun 2022 2:36 PM IST)
t-max-icont-min-icon

புதிய பேருந்து நிலையத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53.13 லட்சம் செலவில், 9.25 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று புதிய பேருந்து நிலையத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இந்த பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செய்லபடும் முதலுதவி சிகிச்சை அறை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 1000 க்கும் மேற்பட்ட டூ வீலர்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது .

அதன் தொடர்ச்சியாக மாலை வேலூர் கோட்டை வளாகத்தில் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.


Related Tags :
Next Story