டெல்டா குறுவை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை


டெல்டா குறுவை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
x

குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10.30 மணியளவில் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

வேளாண் துறை ஆணையர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்யும் நிலையில் குறுவை பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

போதிய நீர் கடைமடை வரை செல்லாததால் குறுவை சாகுபடி பாதிக்கபட்டதாக விவசாயிகள் கூறிய நிலையில் ஆலோசனை மேற்கொள்கிறார்.


Next Story