கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை அமைச்சா் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
சிங்கம்புணரி
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை அமைச்சா் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாம்
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், அரளி கோட்டை ஊராட்சியிலுள்ள அரசு உயர்நிலைபள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
முன்னதாக துணை இயக்குனர் சுகாதாரத்துறை விஜய் சந்திரன், அரளிகோட்டை ஊராட்சி தலைவர் புவனேஸ்வரி காளிதாஸ் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட குழு உறுப்பினர் மதிவாணன், மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதார சேவைகள்
முகாமில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், முதல்-அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று, அத்தியாவசியமான சுகாதார சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் பொது மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஊட்டச்சத்து பெட்டகம்
நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களை அமைச்சர் வழங்கினார். இதில், துணை இயக்குனர் விஜய்சந்திரன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, துணை வட்டாட்சியர் ஆனந்தன், வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரகுமார், லட்சுமண ராஜூ, தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ்குமார், சிவசுப்பிரமணியன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சசி பாண்டித்துரை, பில்லப்பன், முனியாண்டி, ரவிச்சந்திரன் மற்றும் அரளிகோட்டை ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர்கள், சூரக்குடி, பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.