விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த அமைச்சர் பொன்முடி கலெக்டர்


விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த அமைச்சர் பொன்முடி கலெக்டர்
x

திருவெண்ணெய்நல்லூர் ஏமப்பூரில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த அமைச்சர் பொன்முடி, கலெக்டர்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏமப்பூர் ஏரிக்கரை பகுதியில் கொங்கராயன்நல்லூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கோவிந்தன் (வயது 40) என்பவர் விழுப்புரத்திலிருந்து கொங்கராயநல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது எதிரே சபரீசன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வானத்தில் மோதி விபத்து ஏற்பட்டு இருவரும் காயமடைந்தனர். அப்போது திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலெக்டர் மோகன் ஆகியோர் விபத்தை நேரில் பார்த்ததும் தங்கள் கார்களை உடனடியாக நிறுத்தினர்.

பின்னர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டரிடம் அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார். இதையடுத்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய கலெக்டர் மோகன் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவ கல்லூரி முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்தில் காயமடைந்தவருக்கு உடனடியாக உயர் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் கலெக்டர் மோகன் சம்பவ இடத்தில் இருந்து அலுவலகத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.


Next Story