வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Aug 2023 7:45 PM GMT (Updated: 6 Aug 2023 7:45 PM GMT)

அதிகரட்டி, கேத்தி பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சேமந்தாடா முதல் பூசானி துறை வரை ரூ.28.65 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் தூரட்டி கிராமத்தில் முடிக்கப்பட்ட தார்ச்சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கேத்தி பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சமையலறை மேற்கூரை பணி, காட்டேரி முதல் கேத்தி பாலாடா வரை மற்றும் கோடேரி கிராம தார்ச்சாலையை நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.87.50 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யும் பணி, தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் ரூ.24.50 லட்சத்தில் வளம் மீட்பு பூங்காவில் கான்கிரீட் தரைதளம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து அதிகரட்டி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் உரம் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு உரங்களை வழங்கி, மரக்கன்றுகளை நடவு செய்தார். ஜெகதளா, உலிக்கல், அதிகரட்டி ஆகிய பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்து, சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் 4 பேருக்கு உடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்ண குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, செயல் அலுவலர்கள் நடராஜன், சதாசிவம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story