திருவள்ளூர் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம்


திருவள்ளூர் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம்
x

ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பவானி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

பக்தர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிபத்து போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் பொது தரிசனத்தில் அதிக பக்தர்கள் வழிபாடு செய்ய வழிவகை செய்துள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.



Next Story