அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை


அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2023 11:08 AM IST (Updated: 21 Jun 2023 1:53 PM IST)
t-max-icont-min-icon

செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை தற்போது நிறைவடைந்துள்ளது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story