செம்பரம்பாக்கம் ஏரி அருகே ரூ.1½ கோடியில் மீன் வளர்ப்பு பண்ணை


செம்பரம்பாக்கம் ஏரி அருகே ரூ.1½ கோடியில் மீன் வளர்ப்பு பண்ணை
x

செம்பரம்பாக்கம் ஏரி அருகே ரூ.1½ கோடியில் மீன் வளர்ப்பு பண்ணையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு

குன்றத்தூர் அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மலையம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 400 சதுர மீட்டர் பரப்பளவில் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு நிலையம் அமைந்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு கூடுதலாக 1,260 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் புதிய மீன் குஞ்சு வளர்ப்பு கட்டமைப்பை உருவாக்கும் பட்சத்தில் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் நீர் நிலைகளில்மீன் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு ரூ.1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் மூன்று புதிய மீன் குஞ்சு வளர்ப்பு தொட்டி அமைத்தல் மற்றும் ஆறு மீன் குஞ்சு நாற்றங்கால் தொட்டி புனரமைத்தல் அதுமட்டுமின்றி வண்ண மீன்கள் மற்றும் வட மாநிலத்தில் உள்ள மீன்களை கொண்டு வந்து உற்பத்தி செய்வது உள்ளிட்ட பணிகள் முடிந்தது. இந்த மீன் குஞ்சு உற்பத்தி பண்ணையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.


Next Story