வெள்ள நிவாரணம் ரூ.6,000-க்கான டோக்கன் வழங்கும் தேதியை அறிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


வெள்ள நிவாரணம் ரூ.6,000-க்கான டோக்கன் வழங்கும் தேதியை அறிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Dec 2023 7:48 PM IST (Updated: 10 Dec 2023 9:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு கோரியுள்ள இடைக்கால நிவாரண நிதியை மத்திய அரசிடமிருந்து எடப்பாடி பழனிசாமி பெற்று தர வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது;

"வெள்ள நிவாரணமாக மத்திய அரசு கொடுத்துள்ள நிதி போதாது. தமிழக அரசு கோரியுள்ள ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் நண்பர் தானே.. ஒன்றிய அரசிடம் பேசி நிதியை வாங்கித்தரச்சொல்லுங்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் வருகிற 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும். பத்து நாட்களுக்குள் நிவாரண தொகை முழுவதுமாக வழங்கப்பட்டுவிடும்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story