நாளை மறுநாள் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்புதி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்


நாளை மறுநாள் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்புதி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்
x

கடலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,


ஆலோசனை கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள மணிமகாவில் நடந்தது. இதற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் மாலிக், தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் என்ஜினீயர் கார்த்திகேயன் வரவேற்றார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கடலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமுத்து, சக்திவேல், சுதாசம்பர், பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், கடலூர் மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் காட்டுமன்னார்கோவில் மேற்கு முத்துசாமி, கிழக்கு ராமலிங்கம், குறிஞ்சிப்பாடி தெற்கு சிவக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் கருணாநிதி, காட்டுமன்னார்கோவில் நகர செயலாளர் கணேசமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சோழன், நடராஜன், சங்கர், ராஜேந்திகுமார், தங்க.ஆனந்தன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story