ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த தம்பதிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெகுமதி வழங்கினார்


ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த தம்பதிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெகுமதி வழங்கினார்
x

சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியை நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்

சென்னை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம், புளியரை கிராமப் பகுதியில் (25-2-2024) அன்று நள்ளிரவு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு செங்கோட்டை - கொல்லம் ரெயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரெயிலை அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா-வடக்குத்தியாள் ஆகியோர் தண்டவாளத்தில் ஓடிச்சென்று டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநருக்கு சைகை காண்பித்து, ரெயிலை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.அத்தம்பதியரின் வீரதீர செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியை நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார் . மேலும் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கினார் .


Next Story