அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்.
தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை சிப்காட் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்திற்கான மேடை மற்றும் இருக்கைகள் மாநாட்டு பந்தல் போல் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் தி.மு.க. வடக்கு, தெற்கு மாவட்ட இளைஞர் அணியினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.