வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு


வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:46 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கூட்டம்

முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், தென் மாவட்டங்களில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளைமறுநாள்(திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் வந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கள ஆய்வு நடத்துகிறார். இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயலாக்கங்கள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சா் பெரியகருப்பன் கலந்து கொண்டு துறை வாரியாக ஆய்வு செய்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் ஆய்வு

பின்னர் அமைச்சர் பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டங்கள் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்க செய்யும் வகையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வது தலையாய கடமையாகும். அரசின் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி பணிகள், பணிகளின் முன்னேற்றம், செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டும், சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து மண்டல வாரியாக ஆய்வு கூட்டமும் மேற்கொண்டு வருகிறார்.

அதனடிப்படையில் 3-வது ஆய்வு கூட்டமாக, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் மண்டல மாவட்டங்களில் வருகிற 5-ந் தேதி, 6-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் முதல்-அமைச்சர் வருகை தந்து கள ஆய்வு செய்ய உள்ளார்.

அருங்காட்சியகம் திறப்பு

மேலும், சிவகங்கை மாவட்டத்திற்கு புகழ் சேர்க்கின்ற வகையிலும், சங்ககால தமிழர்களின் நாகரீகத்தை உலகளவில் தெரியப்படுத்துகின்ற வகையிலும், ரூ.18 கோடியே 42லட்சம் செலவில் கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தினை திறந்து வைக்க உள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். கடந்த 20 மாத ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story