ரூ.13¾ கோடியில் புதிய திட்டப்பணிகள்


ரூ.13¾ கோடியில் புதிய திட்டப்பணிகள்
x

தாராபுரம், குண்டடம் பகுதியில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர்

தாராபுரம், குண்டடம் பகுதியில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதிய திட்டப்பணிகள்

குண்டடம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கொளத்துப்பாளையம் பேரூராட்சி புதிய பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்து ெகாண்டு பணியை தொடங்கி வைத்தனர்.

அதன்படி குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி ரங்கபாளையத்தில் தும்பலப்பட்டி முதல் என்.குங்குமம்பாளையம் வரை, பல்லடம்- தாராபுரம் சாலை முதல் கொக்கம்பாளையம் வழியாக பொங்கலூர் மேட்டுக்கடை வரை, சங்கரண்டாம்பாளையம்- செல்லப்பிள்ளைகவுண்டன்புதூர் ரோடு முதல் ரங்கபாளையம் வரை, குள்ளக்காளிபாளையம் முதல் அமராவதிக்கவுண்டன்புதூர் வரை சாலை மேம்பாட்டுப் பணி நடக்கிறது.

கொளத்துப்பாளையம் பேரூராட்சி ராமமூர்த்தி நகர் மற்றும் பஞ்சப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. கோவிந்தாபுரம் முதல் குண்டடம் சாலை வரை சாலை மேம்பாட்டுப் பணி என மொத்தம் ரூ.13 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 33 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர். சிவகுமார், தாராபுரம் நகர்மன்ற தலைவர் கு.பாப்பு கண்ணன், நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், கொளத்துப்பாளையம் பேரூராசி செயலாளர் கே.கே. துரைசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் திருமலை குமார், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஈ.சசிகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story