கொசு ஒழிப்பு பணிக்காக 6 டிரோன் இயந்திரங்கள் - அமைச்சர்கள் வழங்கினர்


கொசு ஒழிப்பு பணிக்காக 6 டிரோன் இயந்திரங்கள் - அமைச்சர்கள் வழங்கினர்
x

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக டிரோன்கள் மற்றும் இயந்திரங்களை அமைச்சர்கள் வழங்கினர்.

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக டிரோன்கள் மற்றும் இயந்திரங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா. சுப்ரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.

ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சியின் ஒன்று முதல் 15 வரையிலான மண்டலங்களில் கொசு புழு நாசினி தெளிப்பதற்காக ஒரு கோட்டத்திற்கு ஒரு கைத்தெளிப்பான் வீதம் 200 கோட்டங்களுக்கு கைத்தெளிப்பான்கள் வழங்கப்பட்டன.

அதேபோல் நீர் வழித்தடங்களில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்வதற்காக 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 டிரோன் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.


Next Story