கலெக்டர் அலுவலக கட்டுமானம், விழா மேடை அமைக்கும் பணிகள் அமைச்சர்கள் வேலு, காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு

கலெக்டர் அலுவலக கட்டுமானம், விழா மேடை அமைக்கும் பணிகள் அமைச்சர்கள் வேலு, காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு
x

ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளையும், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள இடத்தில் பந்தல் அமைக்கும் பணிகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளையும், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள இடத்தில் பந்தல் அமைக்கும் பணிகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

புதிய கலெக்டர் அலுவலகம்

ராணிப்பேட்டை பாரதி நகரில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதனை நாளை (20-ந் தேதி)தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளையும், ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கும் பணியினையும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணி நூல் துறைஅமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

எம்.எல்.ஏ.க்கள்

அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நந்தகுமார் எம்.எல்ஏ. ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

=======

Next Story