மனித கை போல விற்பனைக்கு வந்த அதிசய முள்ளங்கி


மனித கை போல விற்பனைக்கு வந்த அதிசய முள்ளங்கி
x

வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்கு வந்த முள்ளங்கி ஒன்று, 5 விரல்கள் கொண்ட மனிதர்களின் கைகளைப் போல காணப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் என்பவர், தனது தோட்டத்தில் முள்ளங்கி பயிரிட்டுள்ளார். இன்று இவர் அறுவடை செய்து, வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்த முள்ளங்கி ஒன்று, 5 விரல்கள் கொண்ட மனிதர்களின் கைகளைப் போல காணப்பட்டது.

இந்த அதிசய முள்ளங்கியை விவசாயிகளும், நுகர்வோர்களும், பொதுமக்களும் வியந்து பார்த்து சென்றனர்.


Next Story