ரூ.83 ஆயிரம் ரேஷன் பொருட்கள் முறைகேடு


ரூ.83 ஆயிரம் ரேஷன் பொருட்கள் முறைகேடு
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே ரூ.83 ஆயிரம் ரேஷன் பொருட்கள் முறைகேடு விற்பனையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் ராயர் மகன் சிவகுமார்(வயது 38). இவர் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாத்தூர் மற்றும் அம்மாபேட்டை ஆகிய ரேஷன் கடைகளில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2 ரேஷன் கடைகளிலும் 2,048 கிலோ அரிசி, 151 கிலோ சர்க்கரை, 228 கிலோ கோதுமை, 30 கிலோ பருப்பு, 198 பாக்கெட் பாமாயில் ஆகியவற்றை வெளிமாா்க்கெட்டில் விற்பனை செய்துவிட்டு அவற்றை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ததாக முறைகேடில் ஈடுபட்டது தொியவந்தது. இதன் மதிப்பு ரூ.83 ஆயிரத்து 525 என கூறப்படுகிறது.

பின்னர் இந்த முறைகேடு குறித்து கள்ளக்குறிச்சி கூட்டுறவு துணைப்பதிவாளர் சுரேஷ் கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி முறைகேடில் ஈடுபட்ட ரேஷன் கடை விற்பனையாளர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

1 More update

Next Story