கழிவு பொருட்களுக்கு மர்மநபர்கள் தீவைப்பு
நெல்லை அரசு ஆஸ்பத்திரி அருகே கழிவு பொருட்களுக்கு மர்மநபர்கள் தீவைத்து சென்றனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இதன் அருகே பல்நோக்கு அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று காலையில் இந்த ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் அருகே கொட்டப்பட்டு இருந்த கழிவு பொருட்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் அந்த பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது.
இதற்கிடையே எரிக்கப்பட்டது மருத்துவ கழிவுகள் என குற்றச்சாட்டு எழுந்தன. இதுகுறித்து மருத்துவமனை சார்பில், மருத்துவமனை வளாகம் அருகே கொட்டப்பட்டு இருந்த கழிவு பொருட்கள் தீயில் எரிந்து உள்ளன. அதற்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை. இதில் மருத்துவக்கழிவுகள் இருப்பது போல் தெரியவில்லை. இருந்தாலும் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.