அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்ற தாய், மகள் மாயம்

அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்ற  தாய், மகள் மாயம்
x

அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்ற தாய், மகள் மாயம்

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி கர்ணன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). பால் வியாபாரியான இவருக்கு அனுசியா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி காலை அனுசியா குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாததால் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் செந்தில்குமார் தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தரக்கோரி எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story