காணாமல் ேபான சிறுவன் ஊட்டியில் மீட்பு
காணாமல் ேபான சிறுவன் ஊட்டியில் மீட்பு
கோவை
சென்னையை சேர்ந்த வங்கி பெண் அதிகாரி ஒருவரது 13 வயது மகன், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். கோடை விடுமுறையையொட்டி அந்த சிறுவனுடன், கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அந்த வங்கி பெண் அதிகாரி வந்தார்.
நேற்று முன்தினம் உறவினர் வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கிழக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா மற்றும் சிங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவனை தேடும் பணி நடந்தது. அதில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்த்தில் இருந்து அந்த சிறுவன் ஒரு வேனில் ஏறி சென்றது தெரியவந்தது. மேலும் சிறுவன் காணாமல் போனது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதற்கிடையில் அந்த சிறுவன், ஊட்டி டவுனில் நிற்பதாக கார் டிரைவர் ஒருவர் இன்ஸ்பெக்டர் வினோத்துக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே ஊட்டிக்கு சென்ற போலீசார், சிறுவனை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனை வேனில் ஏற்றி சென்ற நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.