குழந்தையுடன் பெண் மாயம்


குழந்தையுடன் பெண் மாயம்
x

குழந்தையுடன் பெண் மாயமானார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது 51). இவர்களுடைய மகள் கிருஷ்ணபிரியா(23) என்பவரை படநிலை கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 3 வயதில் சக்தி என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இதனால் தாய் வீட்டில் இருந்த கிருஷ்ணபிரியாவை பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. ஆனால் அன்று மாலையே கிருஷ்ணபிரியா தாய் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். மறுநாள் காலை கிருஷ்ணபிரியாவையும், அவரது குழந்தையையும் காணவில்லை. அவர்களை அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபிரியாவையும், அவரது குழந்தையையும் தேடி வருகிறார்.

1 More update

Next Story