குடும்ப தகராறில் கோபித்து சென்ற பெண் மாயம்
குடும்ப தகராறில் கோபித்து சென்ற பெண் மாயமானார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 38). இவரது மனைவி அசோதை (20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அசோதை கோபித்துக் கொண்டு தா.பழூர் அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதையடுத்து சுப்பிரமணியன் அவரது மாமனார் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் அசோதை அங்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து தா.பழூர் போலீசில் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.