நார்வே செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


நார்வே செஸ் தொடரில் வென்ற  பிரக்ஞானந்தாவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

கோப்புப் படம்

நார்வே செஸ் தொடரில் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 'டுவிட்டர்' பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும், புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும். இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story