குரூப்-2 முதன்மை தேர்வுக்கு மாதிரி தேர்வு


குரூப்-2 முதன்மை தேர்வுக்கு மாதிரி தேர்வு
x

குரூப்-2 முதன்மை தேர்வுக்கு மாதிரி தேர்வு இன்றும், 20-ந் தேதியும் நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு அரசு பணிக்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்விற்கு மாதிரி தேர்வு இன்றும் (வெள்ளிக்கிழமை), வருகிற 20-ந்தேதியும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே குரூப்-2 முதன்மை தேர்வுக்கு தயாராகுபவர்கள் தங்களது முதன்மை தேர்வு நுழைவு சீட்டு நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் வந்து மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story