மோகனூர் பகுதியில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு


மோகனூர் பகுதியில்  கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு
x

மோகனூர் பகுதியில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு

நாமக்கல்

மோகனூர்:

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை சுத்தம் செய்வர். இதையடுத்து கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வர்.

அதன்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் காட்டுப்புத்தூர் சாலையில் உள்ள தேவாலய வளாக கல்லறை தோட்டத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். இதேபோல் ஆர்.சி.பேட்டப்பாளையத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்கு சென்று உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

முன்னதாக பங்குத்தந்தை ஜான் போஸ்கோ பால் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story