புதுச்சத்திரம் அருகே சரக்கு ஆட்டோ டிரைவரை தாக்கி ரூ.19 லட்சம் வழிப்பறி போலீஸ் விசாரணை


புதுச்சத்திரம் அருகே  சரக்கு ஆட்டோ டிரைவரை தாக்கி ரூ.19 லட்சம் வழிப்பறி  போலீஸ் விசாரணை
x

புதுச்சத்திரம் அருகே சரக்கு ஆட்டோ டிரைவரை தாக்கி ரூ.19 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

நாமக்கல்:

புதுச்சத்திரம் அருகே சரக்கு ஆட்டோ டிரைவரை தாக்கி ரூ.19 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு ஆட்டோ டிரைவர்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த திருமலைப்பட்டி அருகே உள்ள கும்மநாயக்கனூரை சேர்ந்தவர் ஜீவா (வயது 25). இவர் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் பேளுக்குறிச்சியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மளிகை பொருட்களை சரக்கு ஆட்டோவில் எடுத்து சென்று விற்பனை செய்து வருவது வழக்கம்.

அதன்படி ஜீவா சரக்கு ஆட்டோ உரிமையாளர் சக்திவேல் அறிவுறுத்தலின்பேரில், பேளுக்குறிச்சியை சேர்ந்த ஹரிஹர சுதனுக்கு சொந்தமான 40 டன் மிளகை விருதுநகருக்கு கொண்டு சென்று விற்று விட்டு மீண்டும் திருமலைப்பட்டி வந்துள்ளார். பின்னர் அங்கு சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஸ்கூட்டரில் எடையப்பட்டி வழியாக பேளுக்குறிச்சிக்கு ஹரிஹரசுதனிடம் வழங்க மிளகு விற்ற ரூ.19 லட்சத்தை எடுத்து சென்றார்.

ரூ.19 லட்சம் வழிப்பறி

எடையப்பட்டி ஏரிக்கரை அருகே ஸ்கூட்டரில் சென்றபோது, ஜீவாவை வழிமறித்த 3 பேர் கும்பல் அவர் மீது மிளகாய் பொடியை தூவியதோடு, கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம், ஸ்கூட்டர் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஜீவாவை தாக்கி அங்கிருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டதாகவும் தெரிகிறது.

தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உண்மையில் பணம் வழிப்பறி செய்யப்பட்டதா? எந்தெந்த வாகனங்கள் அந்த வழியாகச் சென்றது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்ற வாகனங்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

=========


Next Story