ஜனநாயகத்துடன் போட்டியிட்டு பணநாயகம் வென்றது


ஜனநாயகத்துடன் போட்டியிட்டு பணநாயகம் வென்றது
x
தினத்தந்தி 4 March 2023 12:15 AM IST (Updated: 4 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகத்துடன் போட்டியிட்டு பணநாயகம் வெற்றி பெற்றதாக கோவையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

கோயம்புத்தூர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகத்துடன் போட்டியிட்டு பணநாயகம் வெற்றி பெற்றதாக கோவையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

தி.மு.க. கூட்டணி

கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முறைகேடுகளுக்கு கிடைத்த முடிவாக த.மா.கா. கருதுகிறது. இதற்கு அதிகப்படியான வாக்கு வித்தியாசமே எடுத்துக்காட்டு. இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகத்தோடு போட்டியிட்டு பண நாயகம் வென்றுவிட்டதாக வாக்காளர்கள் கருதுகின்றனர். பொது மக்களிடம் மனமாற்றம் தேவைப்படுகிறது. எவ்வித அழுத்தத்திற் கும் பொதுமக்கள் கட்டுப்படக்கூடாது.

தற்காலிக வெற்றி

ஆளுங்கட்சியை பொறுத்தவரை ஆள்பலம், பணபலம், அதிகாரத் தை வைத்து ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி அறையில் பூட்டி வைத்து, வாக்குகளை பெறுவது என்பது இந்திய வரலாற்றிலேயேஇல்லாத வகையில் இந்த இடைத் தேர்தலில் நடந்திருக்கிறது.

தி.மு.க.வின் இந்த வெற்றி தற்காலிகமானது. செயற்கையானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலத்தை தாண்டி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

இவ்வளவு முறைகேடுகளை தாண்டி அ.தி.மு.க. 43,923 வாக்கு களை பெற்றிருக்கிறது என்றால் உண்மையிலேயே அ.தி.மு.க. தான் மக்கள் மனதில் இருக்கிறது என்று அர்த்தம். எனவே இனிவரும் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டால் அ.தி.மு.க.வுக்கு பிரகாசமான வெற்றி கிடைக்கும் சூழல் இருக் கும். தேர்தல் ஆணையம் தேர்தல்களை சரியாக கண்காணிக்க வேண்டும்.

இனிவரும் காலங்களிலாவது இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும். வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றியால், வரும் காலங்களில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story